link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, November 18, 2010

கிடைக்குமா வாழ்வில் ஓர் வரமாக..


கண்கள் உறங்காமலே
தொடர்கிறது கனவுகள்
நீங்காத நினைவுகளாய்
தொடர்கிறது உன் நினைவுகள்

தினமும் என் கனவில்
நீ வருவதாக இருந்தால்
காலம் முழுவதும்
கல்லறை வரையிலும்

கண்மூடி காத்திருக்கின்றேன்

காத்திருப்பதிலும் ஒரு
இதம் இருக்கிறது என்று
உணர்த்தியவன் நீ
இருப்பினும் கல்லறை வரை
காத்திருப்பு தேவையா?

உன் நினைவுகளை
நெஞ்சமதில் பத்திரப்படுத்தியதில்
எஞ்சியது நான் வரையும்
இந்த கவிதை தான்

உன் குரல் கேட்க
இதயம் மெட்டுக் கட்டி பறக்கிறது.
இசை பாடும் இசைதனை
உன் இதயம் கேட்கிறதா?

என் எண்ணங்களை
எரிக்கிறது பொழுதுகள்
ஏதும் வேண்டாம் என்று
எண்ணுகையில்
ஏக்கங்களாய் மனதில் இருக்கும்
ஏராளமான கவலைகளை
சொல்லி அழுவதற்கு
ஏற்கும் மனம் வேண்டும்
கிடைக்குமா வாழ்வில்
ஓர் வரமாக....!

No comments: