link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Tuesday, February 8, 2011

தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்

தமிழீழ தேசிய தலைவரின் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதும் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அவசர சிகிச்சைக்காக அவரை யாழ் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு மீண்டும் வல்வெட்டிதுரைக்கே வந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர் சமயத்தில் அடிக்கடி இடம் பெயரப்பட்டதாலும் அதன்பின் பணகோடா முகாமில் அடைத்துவைக்கபட்டதாலும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது.

அவரின் ஒரு கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வதி அம்மையாருக்கு இரத்த அழுத்தமும் சர்கரையும் உள்ளது.

வல்வெட்டித்துறை மருத்துவமனை மருத்துவர், பார்வதி அம்மையாரை சிறந்த முறையில் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம், அம்மையாரை உடனிருந்து கவனித்து வருகிறார்

No comments: