link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Saturday, February 5, 2011

ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கும் கூகுள்

நியூயார்க், குறுகிய காலத்தில் மிகப் பிரபலமான சமூக இணைப்பு இணைய தளமான பேஸ்புக்குக்கு போட்டியாக புதிய இணைய தளம் தொடங்க உலகின் முன்னணி தேடுதளம் கூகுள் தயாராகி வருகிறது.

இதை அமெரிக்காவின் பிரபல நாளேடான வால் ஸ்டீரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பேஸ்புக் அதிக புகழ்பெற்றுள்ளதால், அதற்கு நிகராக, கடும் போட்டி ஏற்படுத்தும் வகையில் சமூக இணைப்பு இணைய தளம் தொடங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்காக ப்ளேடாம் இங்க்., எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் இங்க்., ஜைங்கா கேம்ஸ் நெட்வொர்க் உள்பட முன்னணி கேம்ஸ் இணைய தள நிறுவனங்களுடன் கூகுள் பேச்சு நடத்தி வருகிறது. அவற்றில் ஜைங்கா கேம்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை கூகுள் சமீபத்தில் வாங்கியுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது.

ஆர்க்குட் என்ற பெயரில் ஏற்கனவே கூகுளுக்கு சொந்தமான சமூக இணைப்பு இணைய தளம் உள்ளது. எனினும், சமீபகாலமாக பேஸ்புக், ட்விட்டர் உள்பட சமூக இணைய தளங்களுக்கு விளம்பரங்கள் குவிவதால், அதுபோன்ற மேலும் ஒரு இணைய தளத்தை தொடங்க கூகுள் விரும்புகிறது. அதேநேரம் ட்விட்டர், பேஸ்புக் இணைய தளங்களில் இருந்து சிறிது வேறுபடும் வகையில் சமூக இணைப்பு நோக்குடன் கேம்ஸ் வசதியையும் கொண்டதாக புதிய இணைய தளத்தை ஏற்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி தெரிவிக்கிறது.

No comments: