link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, February 10, 2011

ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது

ரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார்.

பின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ.வி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: