
காதலிக்க உன் முகம் தேவை இல்லை உன் அன்பு மட்டும் போதும்
Wednesday, April 27, 2011
உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
புகைப்படத்தின் சட்டகம் வடிவமைக்க வேண்டுமென்றால் அதுக்கென்று
போட்டாஷாப் அல்லது கிராபிக்ஸ் மென்பொருள் தெரிந்திருக்க
வேண்டும் என்ற நிலையில் உங்களுடைய புகைப்படத்தின்
சட்டகத்தை நீங்களே வடிவமைக்கலாம் எந்த கிராபிக்ஸ்
மென்பொருளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும்
சில நொடிகளிலே உருவாக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?
உங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது
அதைப்பற்றி தான் இந்த பதிவு. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா
அல்லது புகைப்படத்தை அழகுபடுத்தும் எண்ணம் உள்ளவரா
உங்களுக்கென்று பிரத்யேகமாக உள்ளது இந்த இணையதளம்.இனி
நீங்கள் விரும்பும் புகைப்படத்தின் சட்டத்தை எப்படி அழகாக
மாற்றியமைக்கலாம் என்று பார்ப்போம்.
இணையதள முகவரி : http://clipyourphotos.com/framer

படம் 1

படம் 2
இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Browse என்ற
பட்டனை அழுத்தி உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.அடுத்து
படம் -2 ல் காட்டியபடி நீங்கள் விரும்பும் சட்டகத்தை தேர்ந்தெடுக்கவும்
இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டகம் தானாகவே உங்கள்
புகைப்படத்தை மாற்றிவிடும்.இப்போது “save framed photo”
என்ற பட்டனை அழுத்தி புகைப்படத்தை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து
கொள்ளலாம். புகைப்படம் என்றாலும் அதை மேன்மேலும் அழகுபடுத்த
நினைக்கும் நம்மவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

Sunday, April 17, 2011
அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்

அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்.
April 14, 2011
சாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்
சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்
ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்
நிறுவலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)
அப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய
மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று
பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக
அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.freenew.net
இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும்
சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தறவிரக்கும் போது
Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணினியில்
ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும்
நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தறவிரக்கலாம் அல்லது
இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச
மென்பொருட்களை எளிதாக தேடி தறவிரக்கலாம். ஆனால் இந்தத்
தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும்
இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
புதிதாக வெளிவரும் மென்பொருட்களையும் பழைய மென்பொருளின்
புதிய அப்டேசனை தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.
எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.
வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்
அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.
அன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க

Monday, April 4, 2011
பிரிந்து சென்ற அவள் திரும்ப வந்துவிட்டால்...

தனிமையும் வெறுமையும் சோதனையும் வேதனையும் மாறி மாறி எனை வருடுகின்றன அவள் நினைவொன்றே போதுமென வாழும் என் வாழ்வில்... கண்ணிமைக்கும் நேரத்தில் சாவை முத்தமிட்டு விடுவேன் ஒருவேளை பிரிந்து சென்ற அவள் திரும்ப வந்துவிட்டால்... போனது போனதுதான்...!