link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, June 2, 2011

தமிழனின் மரணத்திக்கு - புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா கொமாண்டோக்களுக்கு உதவிய ஸ்னோவி என்ற நாய் மரணம் (படங்கள் இணைப்பு)

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் - கொமாண்டோப் படையினரின் வழிகாட்டியாகச் செயற்பட்ட போது, காயமடைந்திருந்த ஸ்னோவி என்ற நாய் கடந்த 24ம் திகதி உயிரிழந்துள்ளது.


4வது கொமாண்டோ படைப்பிரிவின் கோப்ரல் சம்பத் இந்த நாயை 2004ம் ஆண்டு தொடக்கம் பயிற்சி கொடுத்து பராமரித்து வந்தார்.

சிறிலங்கா இராணுவத்தில் எஸ்-080 என்ற இலக்கம் வழங்கப்பட்டிருந்த இந்த நாய் வெலிஓயா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகளின் மறைவிடங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தது.

2008 மார்ச் 15ம் நாள் கெம்பிலிஓயா காட்டுப்பகுதியில் நடந்த மோதல் ஒன்றின்போது கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உடையின் ஒரு பகுதியை இந்த நாய் எடுத்து வந்து கொண்டிருந்த போது திடீரென எதிர்த்திசையில் இருந்த மற்றொரு புலிகள் இயக்க உறுப்பினர் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் கைக்குண்டை வீசினார்.

கைக்குண்டு வெடிப்புச் சிதறல் ஒன்று ஸ்னோவியின் தலையில் பாய்ந்து படுகாயமடைந்தது.

உடனடியாக அது உலங்குவானூர்தி மூலம் அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பெரதெனியாவில் உள்ள மிருக மருத்துவ போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மிருக மருத்துவநிபுணர் அசோகா டங்கொல்லவிடம் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு சத்திரசிகிச்சை மேற்கொண்டு இந்த நாயைக் காப்பாற்றினர்.

மிகவும் மோசமான நிலையில் காயமடைந்திருந்த இந்த நாய்க்கு வேறொரு நாயின் குருதியும் ஏற்றப்பட்டது.

இந்த நாய் போரின்போது வழங்கிய பங்களிப்புக்காக ‘ரணவிக்கிரம‘ என்ற பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல வெற்றிகளுக்கு இந்த நாய் காரணமாக இருந்ததாக கொமாண்டோப் படைப்பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக வேவு நடவடிக்கைளுக்காக மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை காடுகளில் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும், ஆழ ஊடுருவும் அணிகளுக்கான வழிகாட்டியாகவும் இந்த நாய் செயற்பட்டுள்ளது.

இந்தநாயின் இழப்பு கொமாண்டோப் படைப்பிரிவின் வழிகாட்டும் குழுக்களுக்கு பேரிழப்பு என்றும் அந்தப் படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நாய் கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ றெஜிமென்ட் தலைமையகத்தில் இராணுவ மரியாதைகளின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் மற்றும் கொமாண்டோ படையினரும் கலந்து கொண்டனர்.

Saturday, May 28, 2011

என் அம்மாவுக்கு ..............

ஏழையாய் பிறந்தாலும் ......
என்னை மேதையாய் வளர்த்தாய் .........

பேதை பருவம் எல்லாம் ..........
பாதை காட்டி .........

அ சொல்லி அன்பையும் .............
தந்து .........

மழை வெயில் உன் முந்தானை ........
குடை தந்து ........

ஆசை முத்தம் தந்து ........
பாசையும் சொல்லி தந்து ...........

என்னை பாங்காய் வளர்த்த ......
உன்னை தாங்குவேன் ........

இம்மண்ணை தொடும் நாள் வரையில் .........
என் கண்ணீரை எல்லாம் ....
உங்கள் முன் புன்னகையாக .....

புத்தம் புது கவிதைகளாக ......
புன்னகைக்கிறேன் ........

முகம் அறியா எத்தனையோ .....
முகவரிகள் .......

என் பக்கங்களை முத்தம் ........
இடுகின்றன !!!!!

என் எழுத்துக்கும் ......
ஒரு முகவரி தந்த .........

இந்த எழுத்து தளத்தின் வழியாக ......
வாசம் வீசுகிறேன் ......
உந்தன் பாசத்தையும் ........
உந்தன் நேசத்தையும் ........
சொல்லமுடியாத வார்த்தைகள் ........
ஆனாலும் உந்தன் பாசத்தால் .....
மலர்ந்த நான் வாசம் வீசுகிறேன் ........

இந்த தலத்தில் என்றும் உன் பாசத்துடன் ,,,,,,,,,
பாலகனாக உன் நேசம் நாடியே !!!!!

Wednesday, April 27, 2011







Downloads:

உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.

புகைப்படத்தின் சட்டகம் வடிவமைக்க வேண்டுமென்றால் அதுக்கென்று
போட்டாஷாப் அல்லது கிராபிக்ஸ் மென்பொருள் தெரிந்திருக்க
வேண்டும் என்ற நிலையில் உங்களுடைய புகைப்படத்தின்
சட்டகத்தை நீங்களே வடிவமைக்கலாம் எந்த கிராபிக்ஸ்
மென்பொருளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும்
சில நொடிகளிலே உருவாக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?
உங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது
அதைப்பற்றி தான் இந்த பதிவு. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா
அல்லது புகைப்படத்தை அழகுபடுத்தும் எண்ணம் உள்ளவரா
உங்களுக்கென்று பிரத்யேகமாக உள்ளது இந்த இணையதளம்.இனி
நீங்கள் விரும்பும் புகைப்படத்தின் சட்டத்தை எப்படி அழகாக
மாற்றியமைக்கலாம் என்று பார்ப்போம்.

இணையதள முகவரி : http://clipyourphotos.com/framer

படம் 1

படம் 2

இந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Browse என்ற
பட்டனை அழுத்தி உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.அடுத்து
படம் -2 ல் காட்டியபடி நீங்கள் விரும்பும் சட்டகத்தை தேர்ந்தெடுக்கவும்
இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டகம் தானாகவே உங்கள்
புகைப்படத்தை மாற்றிவிடும்.இப்போது “save framed photo”
என்ற பட்டனை அழுத்தி புகைப்படத்தை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து
கொள்ளலாம். புகைப்படம் என்றாலும் அதை மேன்மேலும் அழகுபடுத்த
நினைக்கும் நம்மவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.

Sunday, April 17, 2011

அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்


அங்கீகாரத்துடன் புதிய இலவச மென்பொருட்களை ஒரே இடத்தில் இருந்து நிறுவலாம்.

April 14, 2011

சாதாரன இலவச மென்பொருள் தறவிரக்க விரும்பினால் கூகிளில்
சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத்தான் தறவிரக்க வேண்டும்
ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணினியில்
நிறுவலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

புதிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் ( Freeware)
அப்ளிகேசன் பற்றிய தகவல்களும் , எத்தனை பேர் இந்தப்புதிய
மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று
பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக
அறியலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.freenew.net

இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும்
சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தறவிரக்கும் போது
Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணினியில்
ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும்
நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தறவிரக்கலாம் அல்லது
இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச
மென்பொருட்களை எளிதாக தேடி தறவிரக்கலாம். ஆனால் இந்தத்
தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும்
இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
புதிதாக வெளிவரும் மென்பொருட்களையும் பழைய மென்பொருளின்
புதிய அப்டேசனை தறவிரக்க விரும்பும் அனைவருக்கும் இந்ததளம்
பயனுள்ளதாக இருக்கும்.

எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.

வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க உதவும் இலவச மென்பொருள்

அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.

அன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க

Monday, April 4, 2011

பிரிந்து சென்ற அவள் திரும்ப வந்துவிட்டால்...


னிமையும் வெறுமையும் சோதனையும் வேதனையும் மாறி மாறி எனை வருடுகின்றன அவள் நினைவொன்றே போதுமென வாழும் என் வாழ்வில்... கண்ணிமைக்கும் நேரத்தில் சாவை முத்தமிட்டு விடுவேன் ஒருவேளை பிரிந்து சென்ற அவள் திரும்ப வந்துவிட்டால்... போனது போனதுதான்...!

Saturday, February 26, 2011

கடலில் விழுந்த மழைத்துளியை தேடுவது போல தேடுகின்றேன் உன் கண்களின் வழியே என் இதயத்தை...


1.எதிர்பார்ப்புகள் அற்ற நெஞ்சங்களின்
தூய அன்பு காலத்தால் பிரிவதில்லை
என்றும் அழிவதில்லை


2.கடலில் விழுந்த மழைத்துளியை
தேடுவது போல தேடுகின்றேன்
உன் கண்களின் வழியே என் இதயத்தை...


3.காதல் ஒரு இதயத்தின் மொழி
இருவரையும் இணைத்து
ஒருமித்து ஒன்றாக கலக்கச்செய்யும்
அன்பின் மொழி.


4.நான் உன்னை காதலிக்கிறேன்
என்ற வார்த்தைக்குள் மட்டும்
அடங்கிவிடாது எனது காதல்
மொழியைத்தாண்டிய இதயத்தின் உணர்வு


5.உலகம் இன்னும் உயிர்வாழ்வது
உன்னிலும் என்னிலும் இருக்கும்
காதலால் தான் .

Tuesday, February 15, 2011

நம் இணையதளத்துக்கு வருவோரை இசையால், பேச்சால், நம் வாயால் நம் மொழியால் நாமே வரவேற்போம்.

நம் இணையதளத்திற்கு வருவோரை கண்களால் மட்டும்
அழகு படுத்தினால் போதுமா ? காதினால் இனிமையான
ஒலி வந்து அவர்களின் காதுகளையும் வருட வேண்டாமா?
என்னிடம் எந்த மென்பொருளும் இல்லை என்கிறீர்களா ?
பராவாயில்லை. நம் இணையதளத்திற்கு வருவோரை
நம் குரலால் வரவேற்கலாம் , நல்ல இசையால்
வரவேற்கலாம்.ஆங்கில எழுத்துக்களை கொடுத்து அதை
ஒலியாக மாற்றியும் வரவேற்கலாம்.ஒரு பைசா செலவில்லாமல்
எந்த விளம்பரமும் இல்லாமல் இது சாத்தியமா என்றால்
சாத்தியம் தான். எப்படி இதை உருவாக்குவது என்று இனி
பார்ப்போம்.
www.audiopal.com இந்த இணையதளத்திற்கு செல்லவும்.
“GET YOURS IT’S FREE ” என்ற பட்டனை அழுத்தவும்.
போன் மூலம் உங்கள் குரலை பதிவு செய்யலாம்.
அல்லது வார்த்தையை ஒலியாகமாற்றி சொல்லவைக்கலாம்,
மைக்ரோபோன் மூலம் பேசியும் , விரும்பிய இசையை
அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது.
இப்போது நாம் படம் 2-ல் காட்டியபடி ” Text to speech”
என்பதை தேர்வு செய்துள்ளோம். உள்தோன்றும் கட்டத்தில்
நாம் விரும்பிய வார்த்தையை டைப் செய்யவும்.எந்த நாட்டின்
மொழி என்பதயும் ஆண் அல்லது பெண் குரல் யார் சொல்ல
வேண்டும் என்பதை தேர்வு செய்து “Say It ” என்ற பட்டனை அழுத்தவும்.
Preview-ல் பிளே பட்டனை அழுத்தி சரிபார்த்துக்கொள்ளவும்.
அடுத்ததாக உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து “ Get it “
என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த நிமிடம் உங்கள் இமெயில்-ல்
ஒரு லிங்க் ( Link Url) தொடுப்பு கொடுக்கபட்டிருக்கும். அதை க்ளிக்
செய்யவும்.
பட்ம் 3-ல் காட்டியபடி தோன்றும். Publish Destinations
என்ற மெனு இந்த ஒலியை உங்கள் Facebook , Myspace ,
Hi5, Live, Friendster போன்றவற்றில் இணைக்கலாம்
“ Play on load ” என்ற பட்டனை தேர்வுசெய்தால் நம் பக்கம்
லோட் ஆகி முடிந்ததும் தானாகவே Play ஆகும்.
Copy code என்பதை க்ளிக் செய்து உங்கள் இணையத்தில் Paste
செய்யவும்.
Other என்ற மெனுவை தேர்வுசெய்து உங்களின்
சொந்த இணையதளத்திலும் ஒலியை கேட்க வைக்கலாம்.
உங்கள் இணையதளத்தில் இதே மாதிரி குட்டி ஒலிப்பான்
வந்துவிடும்.
முகவரியை சொடுக்கவும்.

Sunday, February 13, 2011

அனைவருக்கும் பயன்தரும் அறிவுத் தகவல் திரட்டு களஞ்சியம் (Realtime encyclopedia )

உலக அளவில் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா பற்றி தெரியதாத
நபர்கள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தகவல்களை
திரட்டிதருவதில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் விக்கிப்பீடியாவைப்
போல ரியல் டைம் ( Realtime) -ல் உடனுக்கூடன் தகவல்களை
கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கூகுளுக்கு அடுத்தபடியாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ள
நாடுவது விக்கிப்பீடியாவை தான் அந்த அளவிற்கு ஜிம்மிவேல்ஸ்
அவர்களிடமிருந்து மக்கள் அறிவு சேவைக்காக உருவாக்கப்பட்ட
விக்கிப்பீடியா இன்று வேர் விட்டு மரமாக வளர்ந்து இருக்கிறது.
விக்கிப்பீடியாவில் இருக்கும் சில குறைபாடுகளை களைந்து
புதிதாக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.mashpedia.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எதைப்பற்றி தகவல் தெரிந்து
கொள்ள வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்து
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான் அடுத்து
வரும் திரையில் ரியல்டைம்-ல் தேடி முடிவுகளை உடனுக்கூடன்
கொடுக்கிறது.தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின்
துணையுடன் இயங்கும் இதில் Realtime-ல் தகவல்களை
தேடி உடனடியாக கொடுக்கிறது. தேடி வரும் முடிவுகள்
மிகச்சரியாகவே இருக்கின்றன கண்டிப்பாக இந்ததளம்

அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

Thursday, February 10, 2011

ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைது

ரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார்.

பின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ.வி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

சென்னை புளியந்தோப்பில் பரபரப்பு: ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை

சென்னை புளியந்தோப்பு கோவிந்தசிங் தெருவில் வசித்து வருபவர் முத்து. வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது 2-வது மகள் தேன்மொழி (வயது 13) சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். தேன்மொழி நன்றாக படிக்க கூடியவள். பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு அம்மை போட்டிருந்தது. அதனால் பள்ளிக்கு செல்ல வில்லை.

நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தாள். நேற்று மதியம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாள். தந்தை முத்து வேலைக்கு சென்று விட்டார். தாயார் தையல் வகுப்பிற்கு சென்று விட்டார். அப்போது திடீரென்று மாணவி தேன்மொழி பள்ளிச்சீருடையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அங்கு தற்செயலாக வந்த வீட்டின் உரிமையாளர், கதவை திறந்த போது தேன்மொழி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி பெற்றோருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே பெற்றோர் விரைந்து வந்து மகள் உடலை பார்த்து கதறி அழுதனர். அவள் படித்த பள்ளிக்குச் சென்று மகள் இறந்து போனது பற்றி கூறினர். அவளின் சாவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

பள்ளியில் அசம்பாவித சம்பவம் நடந்ததா? என தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியை வெளியில் சென்று இருப்பதாக கூறி அனுப்பி விட்டார். இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. தேன்மொழியுடன் படித்த மாணவிகளிடம் நடந்தது பற்றி பெற்றோர் கேட்டறிந்தனர். மாதாந்திர தேர்வில் தேன்மொழி காப்பி அடித்த போது ஆசிரியை ஆண்டாள் கண்டுபிடித்து விட்டதாகவும், அவர் திட்டியதாகவும் பெற்றோரிடம் இந்த விஷயத்தை சொல்வதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் தேன்மொழி அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் பள்ளியின் மீது ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் இன்று காலையில் அம்மையம்மாள் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்றனர். ஆனால் பள்ளி மூடப்பட்டு இருந்தது.

இன்று ஒருநாள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியில் எழுதப்பட்டு இருந்தது. பள்ளியை மூடி விட்டு ஆசிரியர்கள் சென்று விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் புளியந்தோப்பு சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டம் செய்தனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி மாணவியின் தந்தை முத்து கூறியதாவது:-

என் மகள் தேன்மொழி நன்றாக படிக்க கூடியவள். நேற்று முன்தினம் நடந்த தேர்வில் காப்பி அடித்ததற்காக அவளை ஆசிரியை அடித்துள்ளார். கடுமையாக திட்டியதால் விபரீதமான இந்த முடிவை எடுத்துள்ளாள். பள்ளியில் நடந்த சம்பவத்தை அவள் எங்களிடம் சொல்லவில்லை. அவளுடன் படிக்கும் மாணவிகள் சொல்லிதான் இந்த விவரம் எனக்கு தெரிந்தது. என் மகளை பார்ப்பதற்கு பள்ளியில் இருந்து யாரும் வரவில்லை. திடீரென பள்ளியை மூடிவிட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நேற்று முன்கூட்டியே பள்ளியை மூடி விட்டு ஓடி விட்டனர். பள்ளி குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை தண்டிக்க வேண்டியதுதான். அவமானப்படுத்துவது, மிரட்டுவது போன்ற ஆசிரியர்களின் தவறான செயலால் என் மகள் போன்று எத்தனையோ குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எது தப்பு, எது சரி என்று தெரியாத என் மகளை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வகுப்பில் தூங்கிய ஒரு குழந்தையை வெளியில் முழங்கால் போட்டு காயப்படுத்தி உள்ளனர். சிறு சிறு தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் இளம் சிறுவர்களின் மனம் பாதிக்கப்பட்டு விபரீதமான முடிவை எடுக்கிறார்கள். கூலி வேலை செய்து என் மகளை படிக்க வைத்தேன். ஆனால் அநியாயமாக அவளை கொன்று விட்டனர்.

இவ்வாறு கண்ணீர் மல்க அவர் கூறினார்.

தேன்மொழியுடன் படித்த ரேவதி, லாவண்யா ஆகிய இருவரும் கூறுகையில், தேன்மொழி வகுப்பில் நன்றாக படிக்கக்கூடியவள். அவள் சரியாக படிக்காமல் தேர்வு எழுதினாள். அதனால் புத்தகத்தை பார்த்து எழுதியதால் ஆசிரியை திட்டினார். அழுது கொண்டே வீட்டிற்கு சென்றாள். நடந்த சம்பவம் அம்மா, அப்பாவுக்கு தெரியக்கூடாது என வேதனைப்பட்டாள். யாரிடமும் சொல்ல வேண்டாம் என எங்களிடம் கூறினாள். ஆனால் அவள் இப்படியொரு முடிவை எடுப்பாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் அடையார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பேராசிரியைகள் மானபங்கப்படுத்தியதால் மாணவி திவ்யா தூக்கில் தொடங்கி தற்கொலை செய்து கொண்டார். இதையொட்டி 4 பேராசிரியைகள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் இப்போது புளியந்தோப்பில் மாணவி தேன்மொழி ஆசிரியை திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
10 Feb 2011

Wednesday, February 9, 2011

யூடியுப் வீடியோவில் உங்களுக்கு பிடித்த பகுதியை புதிய வீடியோவாக ஆன்லைன்-ல் மாற்ற



இன்றைய காலகட்டத்தில் யூடியுப் ஒரு அத்தியாவசிய தேவையாகவே
மாறிவிட்டது. இத்தகைய யூடியுப் வீடியோவில் நாம் பார்க்கும் பல
வீடியோவின் சிலபகுதிகள் தேவை இல்லாமல் இருக்கும்.
தேவையான பகுதிகளை மட்டும் பார்க்க வேண்டும் என்றாலும்
முழுவதும் பார்த்துதான் ஆக வேண்டும். இந்த குறையை நீக்க
நீங்கள் பார்க்கும் வீடியோவில் தெரிவு செய்த சில பகுதிகளை
மட்டும் சேர்த்து ஒரு வீடியோவாக மாற்றலாம். மாற்றியவுடன்
ஒரு வீடியோ லிங் ( Link URL ) கொடுக்கப்படும்.அந்த வீடியோ
லிங்கை உங்கள் நண்பருக்கு கொடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த
பகுதிமட்டும் தான் இருக்கும். எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் உங்களுக்கு பிடித்த யூடியுப் முகவரியை ( Youtube url )
காப்பி செய்துகொள்ளவும். www.tubechop.com இந்த இணையதளத்திற்கு
செல்லவும். நீங்கள் காப்பி செய்த யூடியுப் முகவரியை படம் 1 -ல்
காட்டியபடி தேடும் இடத்தில் கொடுக்கவும். வரும் முடிவை சுட்டி
உள்ளே செல்லவும். உதாரனத்திற்காக நாம் இளையராஜா வீடியோ
ஒன்றை சுட்டி உள்ளே செல்கிறோம். படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
இடதுபக்கத்தில் உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் இருந்து
தொடங்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கவும்.வலதுபக்கத்தில்
உள்ள செலக்டார் மூலம் எந்த இடத்தில் வீடியோ நிறைவு பெறவேண்டும்
என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அல்லது தொடங்கி முடியும்
நேரத்தை மேலே இருக்கும் கட்டத்திற்குள்ளும் கொடுக்கலாம்.
“Chop it ” என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.அடுத்து தோன்றும்
பக்கத்தில் நீங்கள் தேர்வுசெய்த இடம் முழுவீடியோவாக
மாற்றப்பட்ட்டு அதற்குறிய முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கும்.
நாம் கொடுத்த யூடியுப் முகவ்ரி
மாற்றப்பட்ட வீடியோ முகவரி
http://www.tubechop.com/watch/40427

Tuesday, February 8, 2011

உங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற

வணக்கம்,



தமிழில் வலைப்பூ வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது வலைப்பூவில் காலியாக உள்ள இடத்தில் விளம்பரத்தை வெளியிடும் பொழுது நாம் நம் வலைப்பூ வழியாக பணம் சம்பாரிக்க முடியும்.

பொதுவாக கூகிள் அட்சென்ஸ் தமிழில் வலைப்பூக்களுக்கு விளம்பரம் தருவது இல்லை.

ஆனால், இந்த ClickWinks நிறுவனம் நமது தமிழில் வலைப்பூக்களுக்கு விளம்பரத்தை வெளியிட தருகிறது.

கூகிள் அட்சென்ஸ் போல இந்த தளம் நமக்கு விளம்பரம் தருகிறது. இவர்கள் கூகிள் போல நேர்மையாக பணம் நமக்கு தருகிறார்கள்.இது ஒர் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

இந்த நிறுவனத்தில் நீங்கள் இணைத்து நீங்கள் வைத்து இருக்கும் தமிழ் வலைப்பூவில் விளம்பரத்தை வெளியிடுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தையும் பெறுங்கள்.

Paypal மற்றும் Cheque மூலம் நீங்கள் உங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.
Click Here To Join Clicksor Ad Network


நம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.

என்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப
வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து
இருப்போம் ஆனால் இனி ஆங்கிலத்தில் நம் Communication -ஐ
வளர்க்க இலவசமாக Stationary Forms கொடுத்து விடுபட்ட இடங்களில்
நம்மை நிரப்ப சொல்லி ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் தகுந்தாற் போல்
பலவிதமான Form-கள் எப்படி இருக்கும் , எப்படி இருக்க வேண்டும்
என்று காட்டி நம் கம்யூனிகேசன் வளர ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.bureauofcommunication.com/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த விதமான
Stationary Form நமக்கு தேவையோ அதை சொடுக்கி எளிதாக
தரவிரக்கி விடுபட்ட இடங்களை நிரப்பி நம் Communication -ஐ
வளர்க்கலாம், Observance of Holiday, Airing of Grievance, Statement
of Gratitude, Official Invitation, and Acknowledgment of Occasion
இன்னும் பலவிதமான Form -கள் இங்கு இலவசமாக கிடைக்கின்றன
அவரசக்கடிதம் முதல் முக்கிய கடிதம் வரை எப்படி இருக்க வேண்டும்
என்று சொல்லும் இந்த்தளத்தில் செல்ல எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.

கண்டிப்பாக இந்ததளம் நம் அனைவருக்கும்


எச்சரிக்கை: கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்கள்

எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.

வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும், பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர். மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது.

ஆனால் ஒவ்வொருக்கும் தனியே ஒரு இணையதளம் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. அது மட்டும் அல்ல அரசியல் மொழியில் சொல்வதானால் சொந்த இணையதளம் என்பதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம்.

ஏன் என்றால் எல்லோரும் உங்கள் கூகுலில் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆம் கூகுலில் தகவல்களை மட்டும் தேடுவதில்லை. மனிதர்கள் பற்றிய விவரங்களையும் தான் தேடுகின்றனர். வேலைக்காக விண்ணப்பித்தவ‌ர்களின் தகுதியை சரி பார்க்க வேண்டும் என்றாலும் சரி, புதிதாக அறிமுகமானவர் தொடர்பான விவரங்கள் தேவை என்றாலே பலரும் செய்வது கூகுலில் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது தான். இவ்வளவு ஏன் பெண் பார்ப்பவர்கள் மாப்பிளை எப்படி என தெரிந்து கொள்ளவும் கூட கூகுல் மூலம் தேடிப்பார்க்கலாம்.

கூகுலிங் என்று சொல்லப்படும் இந்த பழக்கம் மிகவும் பரவ‌லாகி வருகிறது. இவ்வாறு தேடப்படும் போது இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும். பேஸ்புக்கில் பகிர்ந்தவை, வலைப்பதிவில் உள்ளவை, வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை, இணைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்த‌வை என எல்லா வகையான தகவல்களையும் கூகுல் திரட்டித்தரலாம்.

அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம், பாதகமானவையும் இருக்கலாம். உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம். இப்போது யோசித்து பாருங்கள் உங்களுக்கென தனியே இணையதளம் இருக்கும் பட்சத்தில் கூகுலிங் செய்யும் போது அநேகமாக அந்த பக்கம் முதலில் வந்து நிற்கும். உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரக்கூடும் அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும்.

எனவே கூகுலில் தேடப்படும் போது நீங்கள் நீங்களாகவே அறியப்பட வேண்டுமாயின் உங்களூக்கான இணையதளம் அவசியம். ஆனால் இணையதளம் வைத்து கொள்ளும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லையே என்றோ அல்லது இணையதளத்தை வைத்து பராமரிப்பது கடினம் என்று நினைத்தாலோ அதற்கு சுலபமாக ஒரு வழி இருக்கிற‌து. இதற்காக என்றே விஸிபிலிட்டி என்னும் தளம் உருவாக்க‌ப்பட்டுள்ளது. இந்த தளம் கூகுலில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.

அதாவது இந்த தள‌த்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடம், உங்கள் கல்வித்தத்குதி போன்ற விவரங்களை பதிவேற்றலாம். அதன் பிறகு கூகுலில் உங்களைப்பற்றி தேடும் போது இந்த பெட்டியே முதலில் வரும். அது சரியான அறிமுகத்தை தரும். ஆக கூகுல் யுகத்தில் தேவையான சேவை என்றே இதனை குறிப்பிடலாம்.

இணையதள முகவரி

தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்

தமிழீழ தேசிய தலைவரின் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதும் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறை மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அவசர சிகிச்சைக்காக அவரை யாழ் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டு மீண்டும் வல்வெட்டிதுரைக்கே வந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர் சமயத்தில் அடிக்கடி இடம் பெயரப்பட்டதாலும் அதன்பின் பணகோடா முகாமில் அடைத்துவைக்கபட்டதாலும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது.

அவரின் ஒரு கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வதி அம்மையாருக்கு இரத்த அழுத்தமும் சர்கரையும் உள்ளது.

வல்வெட்டித்துறை மருத்துவமனை மருத்துவர், பார்வதி அம்மையாரை சிறந்த முறையில் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம், அம்மையாரை உடனிருந்து கவனித்து வருகிறார்

Monday, February 7, 2011

கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.

கூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில்
தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும்
நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு


எதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான்
வல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும்
சொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்
உருவாக்குபவர்கள் கணினியில் தங்கள் தளம் தெரிவதற்கும்
மொபைலில் தெரிவதற்கும் தனித் தனியாகதான் உருவாக்கி
கொண்டு தான் இருக்கின்றனர், பல நிறுவனங்களும் இதற்கு
போட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க
சரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி
கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான
கோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது ஆம் உங்கள் தளங்களை
மட்டும் கொடுங்கள் நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி
காட்டுகிறோம் யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே,

சில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம்
என்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத
அளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி
இருக்கும் இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க
விரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற
பொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம்
வேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு
எழுத்தை மட்டும் பார்க்கலாம்.

முகவரி : http://google.com/gwt/n
pls u like with commnet pls

: புகழ் பெற்ற IT நிறுவனங்களின் பெயர்களின் இரகசியம்!

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி
வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும்
நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள்
எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ
இப்போது பார்ப்போமா!


1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு
நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார்.
இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள்
நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an
Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால்
இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே
இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக,
ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள்
கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன்
சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து
வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான
பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள்
கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும்
வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த
மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே
பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த
வரலாறு.

3. கூகுள் (GOOGLE): சர்ச் இஞ்சின்
கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1
போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர்
லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த
சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற
பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட
வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும்
லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத்
தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம்
கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த
செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப்
பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான
ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப்
போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL): இந்த
நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும்
வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும்
இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு
வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப்
பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட்
மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல
பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL)
என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற
பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப்
பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text
Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே
இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல்
இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும்
குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது.
பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL): இந்த
நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and
Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore
Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில்
இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது.
அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச்
சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே
என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர்
தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM
Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated
Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே
அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில்
கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச்
சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும்
இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால்
ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில்
MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும்
சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு
செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு
MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின்
வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில்
இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web"
என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட்
என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another
Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO
என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம்
மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய
ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட
இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு
இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

Sunday, February 6, 2011

உங்கள் ஐடியாக்களை MindMap ஆக மாற்றிக்கொடுக்கும் பயனுள்ள தளம்.

தினமும் தோன்றும் பலவிதமான ஐடியாக்களை அப்படியே எளிதாக
MIndMap ஆக சேமித்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

உலகில் பிறந்த அனைவருக்கும் ஐடியா என்பது எப்போதும் வந்து
கொண்டே இருக்கும், அப்படி வரும் ஐடியாக்களில் சிலவற்றை
மட்டும் தான் ஞாபகம் வைத்துக்கொண்டு இருப்போம் பல ஐடியாக்கள்
சில நாட்களில் அல்லது மாதங்களில் காணமால் போகும். ஆனால்
இப்படி நமக்கு தோன்றும் ஐடியாக்களை உடனுக்குடன் ஆன்லைன்
மூலம் எளிதான MindMap ஆக மாற்றி சேமிக்கலாம். நமக்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.text2mindmap.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நமக்கு
தோன்றும் ஐடியாக்கள் மற்றும் செய்ய வேண்டிய செயல்களை
எழுத்தாக தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் நம் வேலை
எல்லாம் தட்டச்சு செய்து முடித்தபின் Convert to MindMap என்ற
பொத்தானை அழுத்த வேண்டும் உடனடியாக வலது பக்கத்தில்
நாம் கொடுத்த Text -க்கு தகுந்தபடி அழகான MindMap உருவாக்கப்
பட்டிருக்கும். வலது பக்கத்தின் ஓரத்தில் இருக்கும் Controls என்பதை
சொடுக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்

தங்கள் இலக்கை அடைய இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்
pls coment

Saturday, February 5, 2011

சேவ் பண்ணாத கோப்புகளை திரும்பப் பெற

எம்.எஸ். ஓபீஸ் தொகுப்பில் ஏதேனும் ஒரு வேர்ட், எக்ஸெல் தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள்.

நம்மில் பலர் அந்த முழு பைலையும் முடித்த பின்னர் தான் அதற்குப் பெயர் கொடுத்து சேவ் செய்திடுவோம். முதலிலேயே சேவ் செய்து பெயர் கொடுத்தாலும், பின்னர் பைலின் பெரும்பகுதியினை முடித்து இறுதியில் தான் சேவ் செய்திடுவோம்.

ஒருவேளை என்ன பல வேளைகளில், இதனை தொடக்கத்திலிருந்தே சேவ் செய்யாமல் மூடிவிடுவோம். அவசரமாகக் கம்ப்யூட்டரை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் பலர் என்ன ஆப்ஷன் கேட்கப்படுகிறது என்று அறியாமலேயே படக் என பைலை சேவ் செய்யாமல் மூடிவிட ஆப்ஷன் கிளிக் செய்துவிடுவார்கள்.

அப்புறம் அடடா தவறு செய்துவிட்டோமே என்று பைலை எப்படிப் பெறுவது என்று விழிப்பார்கள். வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தால் மீண்டும் அந்த பைலை உருவாக்குவார்கள். இவர்களுக்காகவே எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பில் AutoRecover என்ற ஒரு வசதி உள்ளது. இந்த வசதியை சேவ் செய்யப்படாத பைல்களையும் சேவ் செய்திடும் வகையில் செட் செய்திடலாம்.

இதை செயல்படுத்திட File டேப் கிளிக் செய்து, அதில் Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். ஆப்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் இடது பக்கம் உள்ள Save பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

வலது பக்கம் Save last auto saved version if I close without saving என்று இருப்பதனை செக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனிமேல் நீங்கள் சேவ் செய்திடாத பைலையும், மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.

சேவ் பண்ணாத பைலை திரும்ப பெறுவதற்கு File டேப் செல்லவும். இந்த டேப்பில் Recent என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனடியில் கிடைக்கும் தகவல்களில் கீழாக வலது மூலையில் Recover Unsaved Documents என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

இதனை கிளிக் செய்தவுடன், உங்களை புரோகிராம் தானாக நீங்கள் சேவ் செய்யாத பைலை சேவ் செய்திட்ட இடத்திற்கு எடுத்துச் செல்லும். இங்கே இத்தகைய பைல்கள் அனைத்தும் இருக்கும். உங்களுக்கு அப்போது எந்த பைல் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து பின்னர் Open என்பதில் கிளிக் செய்திடவும். பைல் திறக்கப்படும்.

ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்

ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம்
டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங்
கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான
ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க
வேண்டும் என்பது தான். டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம்
இருக்காது இந்தநிலையில் நாம் ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங்
கற்கலாம் நமக்கு உதவத்தான் இந்தத்தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.keybr.com

இந்தத் தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி டைப்ரைட்டிங்
கீபோர்டு தெரியும் இதில் நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை மட்டும்
கொடுத்து விட்டு Type செய்ய தொடங்கலாம். ஒவ்வொரு எழுத்தாக
மேலே கொடுக்க நாம் தட்டச்சு செய்ய வேண்டியது தான் தினமும்
சராசரியாக 1 மணி நேரம் செலவு செய்தால் 40 நாட்களுக்குள் நாம்
கணினியில் தட்டச்சு செய்வதில் வல்லவர்கள் ஆகலாம், முதலில்
வேகம் குறைவாக தட்டச்சு செய்ய ஆரம்பித்து அதன் பின் நாட்கள்
செல்ல செல்ல நாம் தட்டச்சு செய்யும் வேகத்தை கூட்டலாம்.
தட்டச்சு பழக விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக

இருக்கும்

35 $ ல் மலிவு விலை கம்ப்யூட்டர் இந்தியா சாதனை

அனைவருக்கும் கம்ப்யூட்டர் என்ற அடிப்படையில் உலகின் மிகவும் மலிவான கம்ப்யூட்டரை இந்திய நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது.

இதன் விலை வெறும் 35 அமெரிக்க டாலர் மட்டுமே எனவும் இந்திய மாணவர்களின் நலன் கருதி இவ்விலை 20 டாலர் முதல் 10 டாலர் வரை குறையலாமெனவும் தெரிகிறது.

இக்கம்ப்யூட்டரானது தொடு திரையுடன் கூடியதாகக் காணப்படுமெனவும் இதனுள் பல மென்பொருட்கள் மற்றும் வசதிகள் உள்ளடங்கியிருக்குமெனவும் வெப் பிரவுசர், பிடிஎப் ரீடர், மீடியா பிளேயர், வீடியோ கான்பிரன்ஸ் மற்றும் புகைப்படமெடுக்கும் வசதி என்பன இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன

இக்கணினி 2011ஆம் ஆண்டு சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

2,127 டாலர் நானோ கார், 2000 டாலர் திறந்த இதய அறுவை சிகிச்சை மற்றும் 16 டாலர் நீர் சுத்தப்படுத்தும் கருவி போன்ற மலிவான இந்திய உற்பத்தி வரிசையில் இதுவும் இந்திய வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துமென வல்லுநர்கள் கருத்து தெரிவிகின்றனர்

ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கும் கூகுள்

நியூயார்க், குறுகிய காலத்தில் மிகப் பிரபலமான சமூக இணைப்பு இணைய தளமான பேஸ்புக்குக்கு போட்டியாக புதிய இணைய தளம் தொடங்க உலகின் முன்னணி தேடுதளம் கூகுள் தயாராகி வருகிறது.

இதை அமெரிக்காவின் பிரபல நாளேடான வால் ஸ்டீரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பேஸ்புக் அதிக புகழ்பெற்றுள்ளதால், அதற்கு நிகராக, கடும் போட்டி ஏற்படுத்தும் வகையில் சமூக இணைப்பு இணைய தளம் தொடங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்காக ப்ளேடாம் இங்க்., எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் இங்க்., ஜைங்கா கேம்ஸ் நெட்வொர்க் உள்பட முன்னணி கேம்ஸ் இணைய தள நிறுவனங்களுடன் கூகுள் பேச்சு நடத்தி வருகிறது. அவற்றில் ஜைங்கா கேம்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை கூகுள் சமீபத்தில் வாங்கியுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கிறது.

ஆர்க்குட் என்ற பெயரில் ஏற்கனவே கூகுளுக்கு சொந்தமான சமூக இணைப்பு இணைய தளம் உள்ளது. எனினும், சமீபகாலமாக பேஸ்புக், ட்விட்டர் உள்பட சமூக இணைய தளங்களுக்கு விளம்பரங்கள் குவிவதால், அதுபோன்ற மேலும் ஒரு இணைய தளத்தை தொடங்க கூகுள் விரும்புகிறது. அதேநேரம் ட்விட்டர், பேஸ்புக் இணைய தளங்களில் இருந்து சிறிது வேறுபடும் வகையில் சமூக இணைப்பு நோக்குடன் கேம்ஸ் வசதியையும் கொண்டதாக புதிய இணைய தளத்தை ஏற்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி தெரிவிக்கிறது.

அனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி

ஆங்கிலத்தில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு விளக்கம் தேட

ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் ஒரே தளத்தில்
இருந்து அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் நேரடியாக
விளக்கம் சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

படம் 1

ஆங்கில வார்த்தைகளில் பல புதுமையான வார்த்தைகள் பார்க்கும்
போது அந்த வார்த்தைக்கான விளக்கத்தை தேடி பல தளங்கள்
செல்வதுண்டு பல தளங்களில் நாம் தேடிய வார்த்தை கிடைப்பதும்
இல்லை இந்த நேரத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.dictionary.hm

இந்தத் தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் எந்த வார்த்தைக்கு விளக்கம் வேண்டுமோ
அந்த வார்த்தையை தட்டச்சு செய்தால் போதும் உடனடியாக
நமக்கு அதே திரையில் நாம் தட்டச்சு செய்திருக்கும் வார்த்தைக்கான
விளக்கம் சில நொடிகளில் வரும். Ajax தொழில்நுட்பத்தில்
இருக்கும் வார்த்தை Catcher என்ற புதிய முறையின் மூலம்
இவர்கள் நேரடியாக தேடிக்கொடுக்கின்றனர். இந்தத்தளத்தில்
நாம் தேடும் வார்த்தைக்கான விளக்கமும் நமக்கு திருப்தி
அளிக்கும் வகையில் உள்ளது கூடுதல் சிறப்பு. கண்டிப்பாக

Friday, February 4, 2011

கள்ளத் தொடர்பைப் பேணிய சிறுமி அடித்துக்கொலை: பங்களாதேஷில் அதிர்ச்சிச் சம்பவம்

பங்களாதேஷ் டாக்காவில் திருமணமான ஆண் ஒருவருடன் கள்ளத் தொடர்பைப் பேணியதாகக் கூறப்படும் 14 வயது சிறுமியொருவர் பிரம்பால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொசாமெட் எனா என்ற அச்சிறுமி 40 வயதான திருமணமான ஆண் ஒருவருடன் உறவு வைத்திருந்தார் எனவும் அதற்குத் தண்டனையாக 100 பிரம்படிகள் வழங்குமாறும் மதகுருமார்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தண்டனைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமயம் சுமார் 70 பிரம்படிகள் வழங்கியபோது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சில மணித்தியாளங்களிலேயே உயிரிழந்துள்ளார்.

இவருடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் 40 வயதான நபருக்கு 100 பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்பட்டிருந்த போதும் அவர் தப்பிச்சென்றுள்ளார்.

எனினும் இச்சிறுமி குறித்த நபரால் பாலியல் வல்லுறவுக்குடுத்தப்பட்டதாகவும் இதனை மறைப்பதற்காவே அச்சிறுமி உறவு வைத்திருந்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவும் சிறுமியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பிரதேசவாசிகள் கொந்தளிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தண்டனை வழங்கிய 4 மதகுருமாரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் விளக்கம் கோரியுள்ளது

ஆன்லைன் மூலம் Id card ( அடையாள அட்டை ) எளிதாக உருவாக்கலாம்.

சிறிய நிறுவனத்தில் இருந்து பெரிய நிறுவனம் வரை அனைத்திற்கும்
அடையாள அட்டை என்ற ஒன்று தற்போது முக்கியனமான ஒன்றாக
மாறி வருகிறது இந்த அடையாள அட்டையை எளிதாக நாமே
வடிவமைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு

சாதாரனமாக கணினி பயன்படுபத்துபவர்களையும் கணினி மேதைகள்
ஆக்க வேண்டும் என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு தான்
வின்மணி பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த
வகையில் இன்று எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்
யாருடைய கிராபிக்ஸ் உதவியும் இன்றி எளிதாக அதுவும்
சில நிமிடங்களில் நம் நிறுவனத்திற்கு தேவையான அடையாள
அட்டையை நாமே வடிவமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://bighugelabs.com/badge.php

இந்தத்தளத்திற்கு சென்று நாம் நம் நிறுவனத்தின் பெயர், எந்த
வண்ணத்தில் அடையாள அட்டை இருக்க வேண்டும் என்பதையும்
மற்றும் இதரத் தகவல்களை கொடுத்து Create என்ற பொத்தானை
சொடுக்கி எளிதாக அதுவும் சில நிமிடங்களில் அடையாள அட்டை
உருவாக்கலாம்.அடையாள அட்டை உருவாக்க்க விரும்பும்
அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மட்டும் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்: அதிர்ச்சிகரமான புள்ளிவிபரங்கள்

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மட்டும் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடந்தேறியிருப்பதாக நேற்று வெளியான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு மேலதிகமாக கடந்த வருடத்துக்குள் 247 யுவதியர் முறைகேடான கர்ப்பத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதாகவும் அப்புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பெண்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று வெளியான அறிக்கையிலேயே மேற்கண்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவ்வறிக்கையில் மேலும் பல அதிர்ச்சிகரமான புள்ளவிபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் மேலை நாடுகளைப் போன்று தற்போது யாழ்ப்பாணத்திலும் திருமணமின்றி சோ்ந்து வாழும் கலாசாரம் பரவி வருகின்றது. தற்போதைக்கு பதினான்கு ஜோடிகள் அவ்வாறு சோ்ந்து வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வுகள் மற்றும் அவ்வாறான நிகழ்வுகளின் மன அழுத்தங்கள் காரணமாக 13 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 959 பிள்ளைகள் தம் பெற்றோரை இழந்துள்ளனர். சுமார் முன்னூறு வரையான பிள்ளைகள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த காலத்தின் துன்பியல் நிகழ்வுகள் காரணமாக இருநூற்றி ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் உள ரீதியாகப் பெரும் பாதிப்படைந்துள்ளனர். 227 பேருக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன

Thursday, February 3, 2011

எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.

வீடியோ மெயில் அனுப்பவது எப்படி என்று பல இமெயில்கள்
நமக்கு வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் இன்று
ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பவது எப்படி
என்று பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.eyejot.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் தளத்தின் முகப்பில் இருக்கும்
Join now என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர்
கணக்கு உருவாக்கி கொள்ளவும். நம் பயனாளர் முகவரியை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு எந்த மென்பொருளும்
இல்லாமல் நம் உலாவி மூலம் வீடியோ இமெயில்
அனுப்பலாம். ஆன்லைன் -ல் வீடியோ சாட் செய்ய விரும்பும்
நபர்களுக்கும் இந்த்தளம் பயனுள்ளதாக இருக்கும்.Download
and save வீடியோ என்பதை சொடுக்கி வீடியோவை நம்
கணினியில் சேமிக்கலாம். பிரபலமாக உள்ள அனைத்து
மொபைல் போன்களிலும் நாம் இந்த வீடியோவைப் பார்க்கலாம்.
பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தற்போது வீடியோ
சாட் பயன்படுத்தி இண்டெர்வியூ நடத்துகின்றனர். வெளிநாட்டில்
இருப்பவர்கள் எந்த மென்பொருளும் இல்லாமல் வீடியோ
சாட் செய்யும் இந்த முறையை தற்போது பயன்படுத்துகின்றனர்.
கண்டிப்பாக அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக

இருக்கும்.

Wednesday, February 2, 2011

20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.

இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி

மாறிக்கொண்டே தான் இருக்கிறது, என்னதான் இசையின் வளர்ச்சி
வேகமாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும்
கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை
கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை
எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.findsounds.com/types.html

இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு படம் 1-ல் காட்டியபடி எந்த ஒலி
தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை
சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன
ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பார்ஃமெட் -ல்
தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான
இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்
இந்ததளம் பயனுள்ள தாக இருக்கும்

.

Tuesday, February 1, 2011

Mugavari illadha payanam,

Kadhal Kavidhai SMS
Mugavari illadha payanam,
Naan tholaindhalum unnai tholaikka'maattaen.
Veliyae theriyadha kaayam,
Naan valiyaal thudithaalum marandhida'maattaen.

Vadivam illadha uruvam,
Naan maraindhalum unnai marrakka'maattaen.
Uravu theriyadha unarvu,
Naan moochhu vittalum un swasam vida'maattaen.
Naan tadhumaarinaalum unnai thavara'maattaen.
en arumai kaadhali'yae!

Monday, January 31, 2011

வெட்கம் என்றால் களைந்து விடுவேன் – இது தயக்கம் அல்லவா தவிக்கிறேன் தவிர்ப்பது எப்படியென்று


பலர் கீறி காயப்படுத்த முடியாத
என் மனதை உன்னால் மட்டுமே
உடைக்க முடிந்தது

என்னை
காதலித்து விடுவோமோ என்றுனக்கும்
காதலிக்க முடியாமல் போய்விடுவேனோ
என்றேனக்கும் தயக்கம்


நமக்கு இடையில்
யார் யாரோ வந்து போகிறார்கள்
காதல் என்னருகிலும்
தயக்கம் உன்னருகிலும் தங்கிவிட்டது

வெட்டி
வெட்டி போட்டாலும்
மீண்டும்
மீண்டும் முளைக்கிறது
உன் மீதான என் காதல்
உன் தயக்கமும் அப்படித்தானோ

மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
எப்படி வந்தாலும்
உன் தயக்கம் என்னை தள்ளி விடுகிறது

என்னை தவிக்கவிடுவது
நீ அல்ல உன் தயக்கம்
உன்னை சுமப்பது நான் அல்ல
என் காதல்

இந்த போட்டியில் யார்
ஜெயிப்பர்கள்
நம் காதல ? உன் தயக்கமா ?
பந்தய பொருள் என் வாழ்க்கை

வெட்கம் என்றால்
களைந்து விடுவேன் – இது
தயக்கம் அல்லவா தவிக்கிறேன்
தவிர்ப்பது எப்படியென்று

Sunday, January 30, 2011

கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி

கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension. Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவியில்
கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம். இதற்கு உதவுவதற்காக
ஒரு Extension உள்ளது Download என்பதை குரோம் உலாவியில்
சொடுக்கி தரவிரக்கலாம்.

இந்தத்தளத்திற்கு சென்று நாம் Install என்ற பொத்தானை சொடுக்கி
நிறுவிக்கொள்ள வேண்டும் அடுத்து படம் 1-ல் காட்டியபடி Tools
என்பதை தேர்ந்தெடுத்து அதில் Extension என்பதை சொடுக்கி
வரும் திரையில் simple startup password என்பதில் Options என்பதை
சொடுக்கி பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம். அடுத்த முறை
நாம் கூகுள் குரோம் உலாவியை திறக்கும் போது பாஸ்வேர்ட்
கேட்கும் இதில் சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான்
நுழையமுடியும். கண்டிப்பாக இந்தப்பதிவு

பெற்றோர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்