link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Thursday, February 3, 2011

எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.

வீடியோ மெயில் அனுப்பவது எப்படி என்று பல இமெயில்கள்
நமக்கு வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் இன்று
ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பவது எப்படி
என்று பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.eyejot.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் தளத்தின் முகப்பில் இருக்கும்
Join now என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர்
கணக்கு உருவாக்கி கொள்ளவும். நம் பயனாளர் முகவரியை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு எந்த மென்பொருளும்
இல்லாமல் நம் உலாவி மூலம் வீடியோ இமெயில்
அனுப்பலாம். ஆன்லைன் -ல் வீடியோ சாட் செய்ய விரும்பும்
நபர்களுக்கும் இந்த்தளம் பயனுள்ளதாக இருக்கும்.Download
and save வீடியோ என்பதை சொடுக்கி வீடியோவை நம்
கணினியில் சேமிக்கலாம். பிரபலமாக உள்ள அனைத்து
மொபைல் போன்களிலும் நாம் இந்த வீடியோவைப் பார்க்கலாம்.
பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தற்போது வீடியோ
சாட் பயன்படுத்தி இண்டெர்வியூ நடத்துகின்றனர். வெளிநாட்டில்
இருப்பவர்கள் எந்த மென்பொருளும் இல்லாமல் வீடியோ
சாட் செய்யும் இந்த முறையை தற்போது பயன்படுத்துகின்றனர்.
கண்டிப்பாக அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக

இருக்கும்.

Wednesday, February 2, 2011

20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.

இசையின் ஒவ்வொரு பரிமாற்றமும் காலத்தின் வேகத்துக்கு ஏற்றபடி

மாறிக்கொண்டே தான் இருக்கிறது, என்னதான் இசையின் வளர்ச்சி
வேகமாக வளர்ந்தாலும் இன்றும் இயற்கையை ரசித்தபடி கூவும்
கூயில், மயில் போன்ற பல வகையான உயிரினங்களின் சத்தத்தை
கேட்பதில் தனி சுகம் தான். இப்படி கிடைக்கும் பலவகையான ஒலியை
எளிதாக தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.findsounds.com/types.html

இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு படம் 1-ல் காட்டியபடி எந்த ஒலி
தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை
சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன
ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பார்ஃமெட் -ல்
தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான
இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்
இந்ததளம் பயனுள்ள தாக இருக்கும்

.

Tuesday, February 1, 2011

Mugavari illadha payanam,

Kadhal Kavidhai SMS
Mugavari illadha payanam,
Naan tholaindhalum unnai tholaikka'maattaen.
Veliyae theriyadha kaayam,
Naan valiyaal thudithaalum marandhida'maattaen.

Vadivam illadha uruvam,
Naan maraindhalum unnai marrakka'maattaen.
Uravu theriyadha unarvu,
Naan moochhu vittalum un swasam vida'maattaen.
Naan tadhumaarinaalum unnai thavara'maattaen.
en arumai kaadhali'yae!

Monday, January 31, 2011

வெட்கம் என்றால் களைந்து விடுவேன் – இது தயக்கம் அல்லவா தவிக்கிறேன் தவிர்ப்பது எப்படியென்று


பலர் கீறி காயப்படுத்த முடியாத
என் மனதை உன்னால் மட்டுமே
உடைக்க முடிந்தது

என்னை
காதலித்து விடுவோமோ என்றுனக்கும்
காதலிக்க முடியாமல் போய்விடுவேனோ
என்றேனக்கும் தயக்கம்


நமக்கு இடையில்
யார் யாரோ வந்து போகிறார்கள்
காதல் என்னருகிலும்
தயக்கம் உன்னருகிலும் தங்கிவிட்டது

வெட்டி
வெட்டி போட்டாலும்
மீண்டும்
மீண்டும் முளைக்கிறது
உன் மீதான என் காதல்
உன் தயக்கமும் அப்படித்தானோ

மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
எப்படி வந்தாலும்
உன் தயக்கம் என்னை தள்ளி விடுகிறது

என்னை தவிக்கவிடுவது
நீ அல்ல உன் தயக்கம்
உன்னை சுமப்பது நான் அல்ல
என் காதல்

இந்த போட்டியில் யார்
ஜெயிப்பர்கள்
நம் காதல ? உன் தயக்கமா ?
பந்தய பொருள் என் வாழ்க்கை

வெட்கம் என்றால்
களைந்து விடுவேன் – இது
தயக்கம் அல்லவா தவிக்கிறேன்
தவிர்ப்பது எப்படியென்று

Sunday, January 30, 2011

கூகுள் குரோம் உலாவிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து வைப்பது எப்படி

கூகுள் குரோம் உலாவியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது
குரோம் Extension. Extension என்று சொல்லக்கூடிய இந்த
Plugin மூலம் நமக்கு பலவிதமான சேவைகள் கிடைக்கிறது அந்த
வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது. கூகுள் குரோம் உலாவியில்
கடவுச்சொல் கொடுத்து வைக்கலாம். இதற்கு உதவுவதற்காக
ஒரு Extension உள்ளது Download என்பதை குரோம் உலாவியில்
சொடுக்கி தரவிரக்கலாம்.

இந்தத்தளத்திற்கு சென்று நாம் Install என்ற பொத்தானை சொடுக்கி
நிறுவிக்கொள்ள வேண்டும் அடுத்து படம் 1-ல் காட்டியபடி Tools
என்பதை தேர்ந்தெடுத்து அதில் Extension என்பதை சொடுக்கி
வரும் திரையில் simple startup password என்பதில் Options என்பதை
சொடுக்கி பாஸ்வேர்ட் கொடுத்து வைக்கலாம். அடுத்த முறை
நாம் கூகுள் குரோம் உலாவியை திறக்கும் போது பாஸ்வேர்ட்
கேட்கும் இதில் சரியான பாஸ்வேர்ட் கொடுத்தால் தான்
நுழையமுடியும். கண்டிப்பாக இந்தப்பதிவு

பெற்றோர்களுக்கும்ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்

Saturday, January 29, 2011

பாலாய்ப் போகும் மனது


கோடு போட்டு வாழ்கிறேன் என்ற உனக்கு
பாடு பட்டு பாலாய்ப் போகும்
மனதை பற்றிக் கவலை இல்லை.............

தோடு போட்ட உன் அழகை கண்டு
சிறு நாடு தாண்டிப் போக
எனக்கு மனமும் இல்லை...........

வீடு தாண்டி போகும் போதெல்லாம் - உன்னை
தேடு என்கிறது கண்கள் - எருமை
மாடு போல நனைந்தாலும் உன்
வீடு முன்னே நிற்க சொல்லுகிறது கால்கள்

இவை இப்படி இருக்க முற்றும் சொல்லியது
உன் இதழ்கள்...........................................

காதலிற்கா?
இல்லை
என் நான்கறை வீட்டிற்காக?

Friday, January 28, 2011

பிறந்துவிட்டேன்


ஒரு முறை உலகில் பிறந்துவிட்டேன் என்பதால்
ஒரு முறையாவது உன்னோடு வாழ துடிக்கின்றேன்
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம் உன்னிடத்தில்
அள்ளி கொடுக்க என்னிடத்தில் வார்த்தை இல்லை