
பலர் கீறி காயப்படுத்த முடியாத
என் மனதை உன்னால் மட்டுமே
உடைக்க முடிந்தது
என்னை
காதலித்து விடுவோமோ என்றுனக்கும்
காதலிக்க முடியாமல் போய்விடுவேனோ
என்றேனக்கும் தயக்கம்
நமக்கு இடையில்
யார் யாரோ வந்து போகிறார்கள்
காதல் என்னருகிலும்
தயக்கம் உன்னருகிலும் தங்கிவிட்டது
வெட்டி
வெட்டி போட்டாலும்
மீண்டும்
மீண்டும் முளைக்கிறது
உன் மீதான என் காதல்
உன் தயக்கமும் அப்படித்தானோ
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
எப்படி வந்தாலும்
உன் தயக்கம் என்னை தள்ளி விடுகிறது
என்னை தவிக்கவிடுவது
நீ அல்ல உன் தயக்கம்
உன்னை சுமப்பது நான் அல்ல
என் காதல்
இந்த போட்டியில் யார்
ஜெயிப்பர்கள்
நம் காதல ? உன் தயக்கமா ?
பந்தய பொருள் என் வாழ்க்கை
வெட்கம் என்றால்
களைந்து விடுவேன் – இது
தயக்கம் அல்லவா தவிக்கிறேன்
தவிர்ப்பது எப்படியென்று