link href='http://us.fotolia.com/id/13084550' rel='shortcut icon' type='image/x-icon'/>

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?

கல்லறை வரை காத்திருப்பு தேவையா?
உன்னை மறப்பேன்என்று நினையாதே !பிறரை மணப்பேன்என்றும் நினையாதே ! மண்னில் மறைவேன் என்றும் நினையாதே !என்னுள் என்றும் நீயென்பதை உணர மறவேன் என்பதை மறவாதே

Friday, February 4, 2011

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மட்டும் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்: அதிர்ச்சிகரமான புள்ளிவிபரங்கள்

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மட்டும் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடந்தேறியிருப்பதாக நேற்று வெளியான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு மேலதிகமாக கடந்த வருடத்துக்குள் 247 யுவதியர் முறைகேடான கர்ப்பத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதாகவும் அப்புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பெண்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று வெளியான அறிக்கையிலேயே மேற்கண்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவ்வறிக்கையில் மேலும் பல அதிர்ச்சிகரமான புள்ளவிபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் மேலை நாடுகளைப் போன்று தற்போது யாழ்ப்பாணத்திலும் திருமணமின்றி சோ்ந்து வாழும் கலாசாரம் பரவி வருகின்றது. தற்போதைக்கு பதினான்கு ஜோடிகள் அவ்வாறு சோ்ந்து வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வுகள் மற்றும் அவ்வாறான நிகழ்வுகளின் மன அழுத்தங்கள் காரணமாக 13 தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 959 பிள்ளைகள் தம் பெற்றோரை இழந்துள்ளனர். சுமார் முன்னூறு வரையான பிள்ளைகள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த காலத்தின் துன்பியல் நிகழ்வுகள் காரணமாக இருநூற்றி ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் உள ரீதியாகப் பெரும் பாதிப்படைந்துள்ளனர். 227 பேருக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன

No comments: