சென்னை புளியந்தோப்பு கோவிந்தசிங் தெருவில் வசித்து வருபவர் முத்து. வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது 2-வது மகள் தேன்மொழி (வயது 13) சென்னை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். தேன்மொழி நன்றாக படிக்க கூடியவள். பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு அம்மை போட்டிருந்தது. அதனால் பள்ளிக்கு செல்ல வில்லை. நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்தாள். நேற்று மதியம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தாள். தந்தை முத்து வேலைக்கு சென்று விட்டார். தாயார் தையல் வகுப்பிற்கு சென்று விட்டார். அப்போது திடீரென்று மாணவி தேன்மொழி பள்ளிச்சீருடையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அங்கு தற்செயலாக வந்த வீட்டின் உரிமையாளர், கதவை திறந்த போது தேன்மொழி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பெற்றோருக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே பெற்றோர் விரைந்து வந்து மகள் உடலை பார்த்து கதறி அழுதனர். அவள் படித்த பள்ளிக்குச் சென்று மகள் இறந்து போனது பற்றி கூறினர். அவளின் சாவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பள்ளியில் அசம்பாவித சம்பவம் நடந்ததா? என தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு அவர் சம்பந்தப்பட்ட ஆசிரியை வெளியில் சென்று இருப்பதாக கூறி அனுப்பி விட்டார். இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. தேன்மொழியுடன் படித்த மாணவிகளிடம் நடந்தது பற்றி பெற்றோர் கேட்டறிந்தனர். மாதாந்திர தேர்வில் தேன்மொழி காப்பி அடித்த போது ஆசிரியை ஆண்டாள் கண்டுபிடித்து விட்டதாகவும், அவர் திட்டியதாகவும் பெற்றோரிடம் இந்த விஷயத்தை சொல்வதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தேன்மொழி அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் பள்ளியின் மீது ஆத்திரம் அடைந்த பெற்றோர், உறவினர்கள் இன்று காலையில் அம்மையம்மாள் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்றனர். ஆனால் பள்ளி மூடப்பட்டு இருந்தது. இன்று ஒருநாள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியில் எழுதப்பட்டு இருந்தது. பள்ளியை மூடி விட்டு ஆசிரியர்கள் சென்று விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் புளியந்தோப்பு சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி மாணவியின் தந்தை முத்து கூறியதாவது:- என் மகள் தேன்மொழி நன்றாக படிக்க கூடியவள். நேற்று முன்தினம் நடந்த தேர்வில் காப்பி அடித்ததற்காக அவளை ஆசிரியை அடித்துள்ளார். கடுமையாக திட்டியதால் விபரீதமான இந்த முடிவை எடுத்துள்ளாள். பள்ளியில் நடந்த சம்பவத்தை அவள் எங்களிடம் சொல்லவில்லை. அவளுடன் படிக்கும் மாணவிகள் சொல்லிதான் இந்த விவரம் எனக்கு தெரிந்தது. என் மகளை பார்ப்பதற்கு பள்ளியில் இருந்து யாரும் வரவில்லை. திடீரென பள்ளியை மூடிவிட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நேற்று முன்கூட்டியே பள்ளியை மூடி விட்டு ஓடி விட்டனர். பள்ளி குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை தண்டிக்க வேண்டியதுதான். அவமானப்படுத்துவது, மிரட்டுவது போன்ற ஆசிரியர்களின் தவறான செயலால் என் மகள் போன்று எத்தனையோ குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எது தப்பு, எது சரி என்று தெரியாத என் மகளை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வகுப்பில் தூங்கிய ஒரு குழந்தையை வெளியில் முழங்கால் போட்டு காயப்படுத்தி உள்ளனர். சிறு சிறு தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில் இளம் சிறுவர்களின் மனம் பாதிக்கப்பட்டு விபரீதமான முடிவை எடுக்கிறார்கள். கூலி வேலை செய்து என் மகளை படிக்க வைத்தேன். ஆனால் அநியாயமாக அவளை கொன்று விட்டனர். இவ்வாறு கண்ணீர் மல்க அவர் கூறினார். தேன்மொழியுடன் படித்த ரேவதி, லாவண்யா ஆகிய இருவரும் கூறுகையில், தேன்மொழி வகுப்பில் நன்றாக படிக்கக்கூடியவள். அவள் சரியாக படிக்காமல் தேர்வு எழுதினாள். அதனால் புத்தகத்தை பார்த்து எழுதியதால் ஆசிரியை திட்டினார். அழுது கொண்டே வீட்டிற்கு சென்றாள். நடந்த சம்பவம் அம்மா, அப்பாவுக்கு தெரியக்கூடாது என வேதனைப்பட்டாள். யாரிடமும் சொல்ல வேண்டாம் என எங்களிடம் கூறினாள். ஆனால் அவள் இப்படியொரு முடிவை எடுப்பாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் அடையார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பேராசிரியைகள் மானபங்கப்படுத்தியதால் மாணவி திவ்யா தூக்கில் தொடங்கி தற்கொலை செய்து கொண்டார். இதையொட்டி 4 பேராசிரியைகள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் இப்போது புளியந்தோப்பில் மாணவி தேன்மொழி ஆசிரியை திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டாள். |
10 Feb 2011 |

No comments:
Post a Comment